×

கார்த்தி கனவை நனவாக்கிய பொன்னியின் செல்வன்

நடிகர் கார்த்திக்கிற்கு குதிரை சவாரி மிகவும் பிடித்தமானது. அவர் நடித்த காஷ்மோரா படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி எடுத்துக் கொண்ட அவர் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது குதிரை சவாரி செய்து வந்தார்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் குதிரை சவாரி செய்துள்ளார். தனது கனவை பொன்னியின் செல்வன் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

எனக்கு குதிரைகள் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். ’காஷ்மோரா’ படத்திற்காக முதன்முதலாக குதிரையேற்றம் கற்றுக்கொண்டாலும், ’பொன்னியின் செல்வன்’ படத்தில்தான் பெரும்பாலான காட்சிகளில் குதிரை மீது பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குதிரைகளுடன் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Karthi ,Ponni ,
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்