×

கலெக்டர் தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர்  அலுவலகத்தில், கலெக்டர்  ஆர்த்தி தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் கூறியதாவது. குவாரிக் குத்தகைதாரர்கள் குவாரிப்பணியின் போது அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கோள்ள வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு மற்றும் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக குவாரிகளில் வெடிப்பொருட்கள் உபயோகிக்கும் முன் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு. கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்து, அதன்பின் வெடிப் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.  குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதபடி, கிராம சாலைகளில் நீர் தெளித்து புழுதி பறக்காமல் தடுக்க வேண்டும். குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து செல்லும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவு உயரம் மட்டுமே களிமங்களை கொண்டு செல்ல வேண்டும். வாகனத்தின் மேல்பகுதியில் தார்பாய் மூடி கொண்டு செல்ல வேண்டும் என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஆர்டிஓக்கள் ராஜலட்சுமி, முத்துமாதவன், உதவி இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கே.விஜயராகவன், உதவி புவியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மு.சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கலெக்டர் தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனை appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Kanchipuram ,Kalkwari ,Kanchipuram Collector ,Collector Arthi ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்