×

யாருடனும் காதல் இல்லை: மஞ்சிமா மோகன் விளக்கம்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை மஞ்சிமா மோகனும், தமிழ் நடிகர் கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது முதல் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள வெளியானது. இதனை அவர்கள் இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். சமீபத்தில் மஞ்சிமா  மோகனுக்கு கவுதம் கார்த்திக் காதல் வழிய வழிய வாழ்த்தும் தெரிவத்திருந்தார்.

இந்த நிலையில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார். மலையாள சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவரிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடமும் நான் மறைத்ததில்லை. ஒவ்வொரு மகிழ்ச்சியையும் நான் மக்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அது சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நான் தவறாமல் கூறி வருகிறேன்.

அப்படி இருக்கும்போது திருமணம் போன்ற பெரிய நிகழ்வை நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் குறித்த தகவல் தொடர்ந்து வெளிவந்தது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து என்னிடம் கேட்டபோது நான் அதை மறுக்கவே செய்தேன். இதனை என் பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்று கூறியுள்ளார் மஞ்சிமா.

Tags : Manjima Mohan ,
× RELATED ஆர்யா, கவுதம் கார்த்திக் இணையும் படத்தில் மஞ்சு வாரியர்