×

சின்ன மம்மிக்கு சவால் விடும் வகையில் சேலம் சாமி குக்கர் ஆட்களை தங்கள் பக்கம் இழுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரையின் பவர்புல் அமைச்சர், தமிழகத்தில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவில்லையாமே… ஓவர் பில்டப் கொடுத்து அசிங்கப்படுதியது தான் காரணமா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தை சேர்ந்த தாமரை மக்கள் பிரதிநிதிகள், முக்கிய தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினாங்க. கடந்த 3ம் தேதி தொடங்கி 4 நாட்கள் இந்த சந்திப்புகள்  அடுத்தடுத்து நடந்தது. ஆனால் பவர்புல் அமைச்சரான ஷாவை சந்திக்க 4 நாட்களாக தமிழக தாமரை மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக முயற்சி செய்தார்களாம். ஆனால், அவரிடம் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லையாம். இதனால் தமிழக தாமரை மக்கள் பிரதிநிதிகளின் இந்த  டெல்லி பயணம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ெசால்றாங்க.. பின்னணியை விசாரித்தால் தமிழ்நாடு எலக்‌ஷனின்போது தமிழக தாமரை தலைவர்கள் கொடுத்த பில்டப்தான் காரணமாம்… அதற்காக தாமரை மேலிடம் கொடுத்த பணத்தை பதுக்கியதும்தான் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்காமல் போனதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்ற குரல் அவர்களது கட்சியில் இருந்தே தோன்றி இருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கார்டன் அரசியல் எல்லாம் சேலம் அரசியலுடன் முட்டி மோதி ஜெயிக்க முடியாது என்று சாமியானவர் சவால் விட்டு சொல்கிறாராமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சிக்கு  எல்லாமே நான்தான் என்று சின்ன மம்மி கூவிக்கிட்டிருக்காங்க… அதுக்காக  காலை முதல் மாலை வரை, லாக்டவுன் முடிஞ்சதும் வந்துடுவேன்… எல்லோரையும் அரவணைத்து செல்வேன்… கட்சியை சரி பண்ணிடுவேன் என்று தொடர்ச்சியா செல்போன்ல பேசிக்கிட்டே இருக்காங்களாம். அதே நேரத்துல சேலம் சாமியும் வீட்டுல இருந்து வெளியே வராம,  குக்கர் நிர்வாகிகளுக்கு வலை வீசிக்கிட்டிருக்காராம். அப்படியே மாங்கனி  மாவட்டத்துல ரெண்டு மா.செ.க்களுக்கு வலைபோட்டிருக்காரு. என்ன கேட்டாலும்  செஞ்சிடலாமுன்னு உத்தரவாதம் சொல்லி ஆள அனுப்பியிருக்காரு. ஆனால் அந்த  ரெண்டு பேரும் அசைஞ்சு கொடுக்கலையாம். அதுல ஒருவர் ஆளுங்கட்சி ஆட்சி நல்ல  நிர்வாகத்த கொடுக்குது… எனக்கு பிடிச்ச அரசா இருக்குது. கடந்த ஆட்சி  ஆளுமைத் திறனே இல்லாம இருந்துச்சுன்னு மனசுல இருந்தத சொன்னாராம்.  இன்னொருத்தர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செஞ்சிருக்காங்க.  இன்னும் ஒரு மாதத்துல பெருந்தலைகள் எல்லாம் கம்பி எண்ணப் போறாங்க.  இந்த கண்கொள்ளா காட்சிய பார்க்க நாங்கள் வெளியே இருந்தாத்தான் நல்லா  இருக்குமுன்னு சொல்லியிருக்காரு. எனினும் சில மாவட்டங்களில் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாம். அவர்கள் கட்சிக்கு வர்றோம், உங்களுக்கு ஆதரவாக செயல்படுவோம், எங்களுக்கு என்ன லாபம்னு கேட்கிறாங்களாம். கரன்சி, பதவியை உங்களை தேடி வரும்… உள்ளாட்சி தேர்தலில் சீட் உண்டு என்றும், சின்ன மம்மியை நம்பி போகாதீங்க, உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன்னு உறுதி கொடுத்துள்ளாராம்… இதனால் சின்ன மம்மி தரப்பு வேறு ஆயுதத்தை கையில் எடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘உண்மையான விவசாயிகளை உழவர் சந்தை உள்ளே விட அதிகாரிகள் மறுக்கிறார்களாமே..’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை  மாவட்டம் ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி,  மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது உழவர் சந்தையில்  விவசாயிகள் மட்டுமே காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வந்தனர்.  ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக வியாபாரிகள் மற்றும்  புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டது. இவர்கள், வேளாண்மைத்துறை  அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, கரன்சி குவிக்கின்றனர்.  இதனால், உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகளால், உழவர் சந்தைக்குள் நுழையவே முடியவில்லை. உழவர்  சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வியாபாரிகள் மற்றும் புரோக்கர்களிடம்  இருந்து அன்றாடம் மாமூல் வசூலிப்பதில், ‘சுந்தர’மான ஒரு அதிகாரிதான்  ‘டாப்’பில் உள்ளார். இவர், காசு கொடுத்தால் உள்ளே வா… இல்லையேல்  கெட்அவுட்… என கறாராக உத்தரவு போட்டுவிடுகிறார். அதனால், இவரது காட்டில்  பண மழை கொட்டுகிறது. உண்மையான விவசாயிகள் ரொம்பவே கஷ்டப்படுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘துவண்டுபோன இலையை கண்டு துள்ளி விளையாடும் தாமரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ்  மாவட்டத்தில் கடந்தாண்டு ஆளும்கட்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவி செய்த  இலை கட்சியினர் இந்த முறை மக்களை கண்டுகொள்ளவில்லையாம். இலை நிர்வாகிகளின் சோகம்.. வெறுப்பு… விரக்தியை நன்றாக பயன்படுத்திக் கொண்டது தாமரை  தரப்பு. ரொம்ப குஷியான மூடில் ெடக்ஸ்ைடல்ஸ் மாவட்டத்தில் தோற்றாலும் இலை மாதிரி நாங்கள் இல்லை… கொரோனா நிவாரணத்தை வழங்குகிறோம்னு களத்தில் இறங்கிடாங்க. முதற்கட்டமாக நான்கு தொகுதிகளிலும் உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு  அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அரிசி மற்றும்  மளிகைப்பொருட்கள்  அடங்கிய தொகுப்புகளை கொடுத்தாங்களாம்…மாற்றுத்திறனாளிகளுக்கு  கொரோனா நிவாரண  நிதி வழங்கி வருவதால் இலைகட்சிக்கு மாற்றாக நாங்கள்தான்   உண்மையான எதிர்கட்சி போல டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் செயல்படுகிறோம் என இலை கட்சியினர் மத்தியில் மார்தட்டி கொண்டார்களாம். இந்த செய்தி அப்படியே, அதிமுக மாவட்ட  செயலாளராக உள்ள மாஜி அமைச்சர் விஜயமானவர் காதிலும் விழுந்ததாம். இப்போதைக்கு அமைதியாக இருங்க.. உள்ளாட்சி தேர்தலில் தாமரையில் ஒரு இதழ் கூட இல்லாமல் உலுக்கி எடுத்துவிடலாம்னு சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post சின்ன மம்மிக்கு சவால் விடும் வகையில் சேலம் சாமி குக்கர் ஆட்களை தங்கள் பக்கம் இழுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem Sami ,Powerbull ,Minister ,Lotus ,Tamil Nadu ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...