×

அதிமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம்: தர்மபுரியில் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

தர்மபுரி: அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 3 ஆண்டாக  தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவைத்தனர் என்று தர்மபுரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். தர்மபுரியில் நேற்று மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் தாலிக்கு தங்கம்,  திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திருமண உதவி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. 2018 முதல் மூன்று ஆண்டுகளுக்கு திருமண உதவித் திட்டம் நிலுவையில் உள்ளது. 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கிறது. ரூ.2,203 கோடி நிதி இருந்தால்தான் உதவித்தொகை வழங்க முடியும். தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராமாக அதிகரித்தனர். ஆனால் அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் பெண்கள் பயனடையாமல் சிரமப்படுகின்றனர். முதல்வருக்கு இத்தகவலை தெரிவித்துள்ளோம். விரைவில் அவர் நல்ல முடிவை அறிவிப்பார். குழந்தை திருமணத்தை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், விஏஓ, அரசு பள்ளி பெண் தலைமை ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும். உள்ளூர் குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் திருமணம் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post அதிமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம்: தர்மபுரியில் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ketajievan ,Darmapuri ,Dhali ,Tali ,Ketajivan ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...