×

நட்ராஜ் ஜோடியான பூனம் பாஜ்வா

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி .இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கிறார். கதம் கதம், கர்ணன் படங்களுக்கு பிறகு இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார்.  ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கே.பி.தனசேகர் கூறியதாவது: கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் கடமை தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது இதைஎப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.

Tags : Poonam Bajwa ,Natraj ,
× RELATED இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன...