ராதிகாவின் பார்ட்டியில் சூர்யா, ஜோதிகா

தமிழ் சினிமாவின் மாஜி ஹீரோயின்கள் அடிக்கடி ரியூனியன்கூடி பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதிகா தன் வீட்டில் சக நடிகர், நடிகைகளுக்கு விருந்தளித்தார். இதில் சூர்யா, ஜோதிகாவும், ராதிகாவுக்கு நெருக்கமான நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நடிகை ராதிகா, சூர்யா-ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைசாக இருப்பதாகவும் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். சூர்யாவும், ஜோதிகாவும் இதுபோன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.

Related Stories: