×

வேலை வாங்கி தருவதாக கூறினால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: விஜிலென்ஸ் அதிகாரிகள் வேண்டுகோள்

திருமலை:  திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சரவணா மற்றும் சுந்தர்தாஸ் ஆகியோர் வேலையில்லா இளைஞர்கள் 15 பேரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.கடந்த காலங்களிலும் இதேபோல் தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்ற சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு உரிய முறையில் அறிவிப்பு வெளியிடப்படும். தேவஸ்தான இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். எனவே, யாராவது பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறினால் நம்ப வேண்டாம். மேலும், பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது….

The post வேலை வாங்கி தருவதாக கூறினால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: விஜிலென்ஸ் அதிகாரிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Tirumalay-Tirupati ,Devasthan ,Saravana ,Dinakaran ,
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...