×

கண்டமங்கலம் பகுதியில் பழுதடைந்த சிசிடிவி கேமராவை சீரமைக்க கோரிக்கை

திருபுவனை: புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட்  , காந்தி சிலை, எம்ஜிஆர் திடல் எதிரே ஆகிய 3 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து பற்றி விவரம் அறிய முடியாமலும், நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பற்றி விவரம் காண முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அப்பகுதி வியாபாரிகள் திருட்டு பயத்தால் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள கேமராக்களை  உடனடியாக பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு கொண்டு வரவும் கூடுதல் கேமராக்களை நிறுவி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். …

The post கண்டமங்கலம் பகுதியில் பழுதடைந்த சிசிடிவி கேமராவை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kandamangalam ,Tirupuvana ,Puducherry ,Kandhangalam ,Vilappuram National Highway ,Gandhi statue ,MGR Tiddal ,Terracotta ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு