×

ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்குபேட்டையை சேர்ந்தவர் நாகபூசணம்(78). இவர் கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இறந்த நாகபூசணத்தின் மகள் ராணி மற்றும் அவரது கணவர் ஸ்ரீதர், மகன்கள் 6ம் வகுப்பு மாணவனான ருக்கேஷ்(11), ஜஸ்வந்த்(13) ஆகியோர் ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் தாலுகா வேலூர் கிராமத்திலிருந்து வந்திருந்தனர்.  இந்நிலையில், நேற்று மதியம் ராணியின் மகன்கள் ருக்கேஷ், ஜஸ்வந்த் ஆகியோர் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் போளிவாக்கம் ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது ருக்கேஷ் ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேற்றில் மாட்டிக்கொண்டு ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Nagapusanam ,Pakupettai ,Polivakam panchayat ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி