×

ஏழை குழந்தைகளுடன் சாரா ரிலீசை கொண்டாடிய விஜய் விஷ்வா

 

சென்னை: நேற்று வெளியான ‘சாரா’ திரைப்படத்தில் விஜய் விஷ்வாவும், யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் பூஜையின்போது இளையராஜா கலந்துகொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர். அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான ‘பிரம முகூர்த்தம’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Tags : Vijay Vishwa ,Sara ,Chennai ,Yogi Babu ,Sellakutty ,Ilayaraja ,Madurai ,Napoleon ,Robo ,
× RELATED இந்தியில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்