×

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவா

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. ஏற்கெனவே அவர் பொன் மாணிக்கவேல் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

Tags : Prabhu Deva ,
× RELATED நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100...