×

ரஷிய மொழியில் வெளியாகும் கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கைதி. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் இதில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். இதன் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது. இந்நிலையில் ‘கைதி’ தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரஷ்ய ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்