×

இந்தியர்களுக்கான பயண தடை நீக்கம்: ஜெர்மனி அரசு அறிவிப்பு

பெர்லின்: கொரோனாவால் விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கான பயண தடையை ஜெர்மனி அரசு நீக்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பரவலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன. அதேநேரம், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உட்பட உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நாடுகளுடனான விமான சேவைக்கு ஜெர்மனி அரசு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவித்துள்ளது….

The post இந்தியர்களுக்கான பயண தடை நீக்கம்: ஜெர்மனி அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Germany ,Berlin ,Indians ,Corona ,second wave of corona ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...