×

மோகன் ஜோடியாக குஷ்பு

80களின் கனவு கன்னியாக இருந்தவர் குஷ்பு. அப்போது ஹீரோவாக நடித்தவர் மோகன். ஆனால் குஷ்புவும், மோகனும் இணைந்து நடிக்கவில்லை. மோகன் கடைசியாக சுட்ட பழம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். தற்போது ஹரா என்ற படத்தில் நடிக்கிறர்.  இதில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியதாவது: இப்படத்தை மோகனுக்கு ஒரு மறக்க முடியாத கம்பேக் ஆக உருவாக்க நினைப்பதால் 90களின் பிரபலமான ஒரு நடிகையை அவருடன் நடிக்கவைக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அப்போது குஷ்புவை இப்படத்தில் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எங்களுக்கு தோன்றியது. ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு அவர் உடல் எடையை குறைத்துள்ளது எங்களுக்கு சாதகமாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு வரு மார்ச் மாதம் சென்னையில் தொடங்குகிறது. என்கிறார்.

Tags : Mohan ,Kushpu ,
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...