×

சசிகுமாரின் காமென் மேன் டைட்டிலுக்கு சிக்கல்

சசிகுமார் நடித்து வரும் காமன்மேன் என்ற படத்தின் தலைப்பு எங்களிடம் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான விஜய் ஆனந்த்  2018ம் ஆண்டே காமென்மேன் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும்  ஏஜிஆர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து சேம்பர் காமென்பட தலைப்பு ஏஜிஆர் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று தணிக்கை குழுவிற்க கடிதம் எழுதியது. இதை ஏற்றுக்கொண்ட தணிக்கை குழு ஏஜிஆர் நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆனந்த் இயக்கிய படத்துக்கு காமென்மேன் தலைப்பை வழங்கி உள்ளது. இதனால் சசிகுமார் படத் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Sasikumar ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி