×

அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர் அய்யாறு வாண்டையார் (90).  வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். சென்னையில் இருந்து அய்யாறுவாண்டையார் உடல் சொந்த ஊரான பூண்டிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட திமுக செயலாளரும் திருவையாறு தொகுதி எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரவு 8 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு வீடு அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ராஜட்சுமி அம்மாள் என்ற மனைவி, பொன்னம்மாள் என்ற மகள் உள்ளனர். காங்கிரசில் இருந்த அய்யாறு வாண்டையார், அதிமுகவில் 2001ல் இணைந்தார். 2001ல் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2001ல் ஜெயலலிதா அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக  21 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான திருநாவுக்கரசர் : தஞ்சை சட்டமன்ற தொகுதியில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்து பணியாற்றிய  பூண்டி அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழக முன்னாள் அமைச்சர்  அய்யாறு வாண்டையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் மரணம்: தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,Ayyar Vandaiyar ,Tiruvaiyar ,Bundi ,Thanjavur district ,Aiyaru Vandaiyar ,Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…