×

சிதம்பரம் அருகே வயலில் புகுந்த 15 அடி முதலை பிடிபட்டது

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்கள் உள்ளது. நேற்று இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் முதலை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்தது. இதைப்பார்த்த வையூர் கிராம பொதுமக்கள் முதலை நடமாட்டம் குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, வயலுக்குள் புகுந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட முதலை சுமார் 400 கிலோ எடையும், 15 அடி நீளமும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் முதலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்….

The post சிதம்பரம் அருகே வயலில் புகுந்த 15 அடி முதலை பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Cuddalore ,Chitambaram, ,Vayoor village ,Ikiram ,Dinakaran ,
× RELATED மேலைச் சிதம்பரம்