×

மூளை கட்டி மற்றும் கொரோனாவால் பாதித்த நடிகை சரண்யா சசிக்கு தீவிர சிகிச்சை

சென்னை: மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர், சரண்யா சசி. தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழிலும், மலையாளத்திலும் சில டி.வி தொடர்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதனால் திடீரென்று படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஓரளவு உடல்நிலை தேறினார். இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மலையாளப் படவுலகினர் தெரிவித்துள்ளனர்….

The post மூளை கட்டி மற்றும் கொரோனாவால் பாதித்த நடிகை சரண்யா சசிக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Saranya Sasi ,CHENNAI ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...