×

ராதே ஷியாமை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார், பாடலுக்கு இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.யு வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.  காதலுக்கும் விதிக்கும் இடையே நடைபெறும் போராட்டமான 'ராதே ஷியாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். அவரது காதலியாக டாக்டர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம் வருகிற மார்ச் 11ம் தேதி வெளிவருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

Tags : Radhe Shyam ,
× RELATED 50 கோடியை திருப்பி கொடுத்தாரா பிரபாஸ்?