×

விஜய் சேதுபதி, சசிக்குமார் வெளியிட்ட ஆல் பாஸ் பர்ஸ்ட் லுக்

 

சென்னை: வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது ‘ஆல் பாஸ்’. மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா ஆர். தயாரித்துள்ளார். நிறங்கள் மூன்று, தருணம் போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி நடிக்கின்றனர். சரத் லொகிட்ஷவா வில்லனாக நடிக்க, ரோஷன் பஷீர், அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி காமெடியனாக நடித்துள்ளனர். தில்ராஜு ஒளிப்பதிவு. ஜேம்ஸ் வசந்தன் இசை. விஜய் சேதுபதி, சசிக்குமார் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

Tags : Vijay Sethupathi ,Sasikumar ,Chennai ,North Chennai ,Maideen ,Mohana R. ,One Step Entertainment ,Dushyant ,Nirangal Moroor ,Janani ,Jayaprakash ,Senthikumari ,Subramania Siva ,Vinothini ,Sarath Lokidshawa ,Roshan Basheer ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்