×

மூன்றாம் பிறை வெளிவந்து 40 ஆண்டுகள்

1982ம் ஆண்டு வெளிவந்த படம் மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை வெளியிடுகிறது. இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் இடம்பெறுகிறது.  அதோடு மூன்றாம் பிறை படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவத்தை ரசிகர்கள் கட்டுரையாக எழுதுகிறார்கள்.

Tags :
× RELATED ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை