×

கைதி உயிரிழப்பு – நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்துமனோ இறந்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு மேலும் என்ன கோரிக்கைகள் உள்ளன என்பது தொடர்பாக கூடுதல் மனுதாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணை முறையாக நடைபெறவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி விசாரணை உரியமுறையில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கைதி உயிரிழப்பு – நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tamil Nadu government ,Muthumano ,Palayankota ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழகஅரசே ஏற்று நடத்த வேண்டும்