×

இயக்குனர் ஆனார் ஜெய்பீம் மணிகண்டன்

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம்  கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன். இவர் இயக்கி உள்ள முதல்  திரைப்படமான நரை எழுதும் சுயசரிதம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. டெல்லி கணேஷ், மணிகண்டன்,  விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இதில் பணி ஓய்வு பெறுகிறவராக டெல்லி கணேசும், வேலை இல்லாத இளைஞராக மணிகண்டனும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஆர் வசந்த குமார் கையாள, ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர்.

Tags : Jaybeem Manikandan ,
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்