×

காட்டாளன் படத்தில் துஷாரா

 

சென்னை: ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘காட்டாளன்’ என்ற படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். ‘மார்கோ’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஷெரீப் முஹமது, தற்போது ‘காட்டாளன்’ என்ற படத்தை தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ரஜிஷா விஜயன், சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரந்தாஸ் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலமாக இசை அமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் மலையாளத்தில் அறிமுகமாகிறார். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாராகும் ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில், துஷாரா விஜயன் நடித்து மலையாளத்தில் அறிமுகமாகிறார். தமிழில் ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘அன்புள்ள கில்லி’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’, ‘ராயன்’, ‘வேட்டையன்’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ என்ற படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார்.

Tags : Chennai ,Paul George ,Antony Varghese ,Sharif Muhammad ,Ravi Basroor ,Rajisha Vijayan ,Sunil ,Kabir Duhan Singh ,Raj Tirantas ,B. Ajanesh Loknath ,Thailand ,Cubes Entertainment ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்