×

சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது: நாசர் நன்றி

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை.

புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்/ தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் பத்மஶ்ரீ உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். பத்மஶ்ரீ விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

Tags : Saukar Janaki ,Nasser ,
× RELATED நாசர் மகன் நடிக்கும் பீட்சா 4