×

மராட்டிய படத்தில் அறிமுகமாகும் நிமிஷா சஜயன்

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நிமிஷா சஜயன். ஒரு குபுரசித்த பையன் , சோலா, தி கிரேட் இண்டியன் கிச்சன், ஒன், நாயாட்டு, மாலிக், மாங்கல்யம் தந்துதானானேனா படங்கள் மூலம் கவன் ஈர்த்தவர். பல விருதுகளையும் பெற்றவர்.

தற்போது   ‘ஹவாஹவாய்’ என்ற படத்தின் மூலம் மராட்டிய மொழியில் அறிமுகமாகிறார். இதனை பிரபல மராட்டிய இயக்குனர் மகேஷ் திலேகர் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நிமிஷா. இதுதவிர ஒரு இந்தி படத்திலும், ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் தமிழ்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

Tags : Nimisha Sajayan ,
× RELATED மிஷன் சாப்டர் 2ம் பாகம் உருவாகும்: அருண் விஜய் தகவல்