×

விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் இன்று காலை தறிகெட்டு ஓடிய கார் மோதி தம்பதி உள்ளிட்ட 3 பேர் பலி: 2 பேர் படுகாயம்

விழுப்புரம்: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெயபாலன் (45). இவர் இன்று காலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான ஆத்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கார் வந்தபோது, திடீரென சின்ன தச்சூரை சேர்ந்த செல்வம் (56) என்பவர் சாலையை கடந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற விக்கிரவாண்டி கக்கன் நகரை சேர்ந்த தயாளன் (62), அவரது மனைவி சந்திரா (58) ஆகியோர் மீது மோதியது. மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற முண்டியம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த வயல்வெளி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் செல்வம், தயாளன், சந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், காரை ஓட்டி வந்த ஜெயபாலன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய ெஜயபாலன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் இன்று காலை தறிகெட்டு ஓடிய கார் மோதி தம்பதி உள்ளிட்ட 3 பேர் பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Jayabalan ,Attur ,Salem district ,Chennai ,Vikravandi ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...