×

21 வயதை கடந்த அனிகா

கேரளாவில் பிறந்து, தனது 6வது வயதில் ‘கதா துடருன்னு’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், அனிகா சுரேந்திரன். தமிழ், மலையாளம், தெலுங்கில் கடந்த 15 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித் குமார் மகளாக நடித்து பிரபலமானார்.

மேலும் ‘நானும் ரௌடி தான்’, ‘மிருதன்’, ‘மாமனிதன்’, ‘பி.டி சார்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட சில படங்களில் நடித்தார். சமீபத்தில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கடந்த 27ம் தேதி தனது 21வது பிறந்தநாளை, தனது தாயுடன் இணைந்து அனிகா சுரேந்திரன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Tags : Anika ,Kerala ,Anika Surendran ,Ajith Kumar ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்