×

சத்தி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.3.30 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேளாண்மை  உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1867 வாழைத்தார்கள்  3.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,867 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கதளி ஒரு கிலோ ரூ.28 க்கும், நேந்திரன் ரூ.32  க்கும், பூவன் தார் ரூ. 390 க்கும், தேன்வாழை  ரூ.400 க்கும், செவ்வாழை ரூ.780 க்கும், ரொபஸ்டா ரூ.390 க்கும், மொந்தன் ரூ.150 க்கும் விலை போனது. விற்பனைக்கு வந்த 1,867 வாழைத்தார்கள் ரூ.3.30 லட்சத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு  சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சத்தி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.3.30 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Satthi Agriculture Cooperative Society ,Sathyamangalam ,Sathyamangalam Agricultural Producers Cooperative Sales Society ,Satthi Agriculture Co-operative Society ,Dinakaran ,
× RELATED தரமான விதை நெல் ரகங்கள் இருப்பு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு