×

ரசிகர்களின் செயலால் ஹுமா குரேஷி வேதனை

ரஜினிகாந்த் நடித்த ‘காலா’, அஜித் குமார் நடித்த ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பெண்ணியம் என்ற வார்த்தையை எதிர்மறையான பார்வையில் பார்க்க வேண்டியதாகி விட்டது. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. இங்கு ஆண்களும், பெண்களும் சம வாய்ப்புகளை பெற வேண்டும். ஆண்களை தாழ்த்த வேண்டும் என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.

நாங்கள் சொல்வது அடிப்படை பொது அறிவு, அவ்வளவுதான். எனது சமூக வலை​த்தளத்​தில் சில ரசிகர்கள், எனது பிகினி போட்டோவை பகிருங்கள் என்று கேட்​கின்றனர். இதுபோன்ற கருத்​துகள் அதிக வேதனை அளிக்​கிறது. இதுபோன்ற இணை​ய​வழி துன்​புறுத்​தலுக்​கு தகுந்த தண்​டனை வழங்​கப்பட வேண்​டும்’ என்றார்.

Tags : Huma Qureshi ,Bollywood ,Rajinikanth ,Ajith Kumar ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்