×

‘‘போலீசார் சல்யூட் அடிக்க மாட்டேங்குறாங்க’’- கேரளா மேயர் புலம்பல்

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும்போது போலீசார் தனக்கு சல்யூட் அடிக்க மறுப்பதாக கூறி திருச்சூர் நகர ேமயர் வர்க்கீஸ், கேரள டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம், திருச்சூர் நகர மேயராக இருப்பவர் வர்க்கீஸ். இவர் கேரள டிஜிபி அனில்காந்த்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; நான் காரில் செல்லும் போது சாலையில் நிற்கும் போலீசார் எனக்கு சல்யூட் அடிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் என்னுடைய கார் வருவதை பார்த்ததும் திரும்பி நிற்கின்றனர். இது எனக்கு மிகுந்த அவமானத்தை தருகிறது.அரசு புரோட்டோகால் படி (வழிகாட்டு நெறிமுறை) கவர்னர், முதல்வருக்கு அடுத்தபடியாக மேயருக்கு மூன்றாம் இடம் உள்ளது. அதன்பிறகு மற்ற அதிகாரிகள் வருகின்றனர். எனவே போலீசார் எனக்கு சல்யூட் அடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு கேரளா போலீஸ் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரவித்துள்ளார். இதுகுறித்து கேரள ேபாலீஸ் அதிகாரிகள் சங்க மாநில தலைவர் பிரசாந்த் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது; சாலைகளில் போலீசாார் சல்யூட் அடிக்க நிறுத்தப்படவில்லை.போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே புரோட்டோக்காலை பின்பற்ற முடியும். இதனால் தான் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தனக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று அதிகமாக யாரும் கட்டாயப் படுத்துவதில்லை. ஆனாலும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு ேபாலீசார் உரிய மரியாதை கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே மேயர் வர்க்கீசின் புகார் கொடுத்து விசாரணை நடத்துமாறு திருச்சூர் சரக ஐஜிக்கு, டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்….

The post ‘‘போலீசார் சல்யூட் அடிக்க மாட்டேங்குறாங்க’’- கேரளா மேயர் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Tiruchur Nagar ,Yemayr Varkis ,DGB ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்