×

எனக்கு கொரோனாவும் இல்லை, கரோனாவும் இல்லை, நடிக்க வாய்ப்பு கொடுங்க: டி.பி.கஜேந்திரன் வேண்டுகோள்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் டி,பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள், மகனே மருமகனே, பட்ஜெட் பத்மநாபன், பந்தா பரமசிவம் உள்பட பல படங்களை இயக்கியவர். தற்போது உடல் நலமின்றி வீட்டில் இருக்கும் அவரை அவரது கல்லூரி தோழரான முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா என்ற தகவல் பரவியது. இதனை மறத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; எனக்கு கொரோனாவும் இல்ல....கரோனாவும் இல்லை, அது வெறும் புரளி. என் உடல் நலமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும், பட வாய்ப்புகள் தரனும். என தெரிவித்துள்ளார்.

Tags : TP Kajendran ,
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்