×

வில்லன் ஆன விதார்த்

ஹிப்ஹாப் ஆதி நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் அன்பறிவு. இந்த  படத்தில் பசுபதி எனும்  வில்லன் வேடத்தில் முதன் முறையாக நடித்துள்ளார் விதார்த். அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறித்து விதார்த் கூறியிருப்பதாவது: இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான கமர்ஷியல் மற்றும்  கலை படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும்  என்று நான் நம்பினேன்.

இது இயக்குனர் அஸ்வின் மீதான ஆழ்ந்த அல்லது குருட்டுத்தனமான நம்பிக்கை என்றே சொல்லலாம். அவர் என் கதாபாத்திரத்தில் என்ன வேண்டினாரோ, அதை என் முழு அர்ப்பணிப்பை தந்து நிறைவேற்றினேன். அன்பறிவு படத்தில் பணியாற்றுவது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் சார், ஆஷா சரத் மேடம் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் மற்றும் இளைஞர்கள் இருந்தனர். சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த கதாப்பாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும். அன்பறிவு ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். என்கிறார் விதார்த்.

Tags : Vidharth ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்