×

நிர்வாணக் காட்சியில் நடித்தேனா..? ஆண்ட்ரியா பரபரப்பு

சென்னை: ‘பிசாசு 2’ படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆண்ட்ரியா கூறியது:
மிஷ்கின் சார் ‘பிசாசு 2’ படத்தில் நிறைய நிர்வாணக் காட்சிகளை எழுதியது உண்மை தான். ஆனால், அதை படமாக்கும்போது, முற்றிலுமாக மாற்றி விட்டார். நான் எந்தவொரு நிர்வாணக் காட்சியிலும் நடிக்கவில்லை. சிலர், சினிமாவில் ஸ்கெர்ட்டை கழட்ட சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய இன்டென்ஷன் என்ன என்பதும் மிஷ்கின் சார் நிர்வாணக் காட்சிகள் பற்றி சொல்லும்போது அவருடைய இன்டென்ஷன் எந்தளவுக்கு சினிமா சார்ந்து இருக்கிறது என்பதும் எனக்கு நல்லாவே புரிந்து தான் அந்த படத்தில் நடித்தேன். பிசாசு 2 படத்தில் நிர்வாணக் காட்சிகள் இல்லை என்றாலும், காமத்தை தூண்டக் கூடிய Erotic சீன்கள் நிறையவே படம் முழுக்க உள்ளது. இவ்வாறு ‘பிசாசு 2’ படம் பற்றி வெளிப்படையாக ஆண்ட்ரியா பேசியுள்ளார். அவர் நடிப்பில் உருவான ‘மனுஷி’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Andrea ,Chennai ,Mishkin Sar ,Mishkin Tsar ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்