- ரம்யா ரங்கநாதன்
- ஜமா பாரி
- சென்னை
- மில்லியன் டாலர் ஸ்டுட
- நியோ கேஸில் கிரியேஷன்ஸ்
- சத்யா கரிகலன்
- யுவராஜ் கணேசன்
- பாரி தி யங்கர்
- தனுஷ்
- பரி இலாபலகன்
சென்னை: ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 7வது படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இப்படத்தின் தயாரிப்பில் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் இணைந்துள்ளது. சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் தயாரிக்கின்றனர். ‘ஜமா’ பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடித்திருந்த ரம்யா ரங்கநாதன், பாரி இளவழகன் ஜோடியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி நடிக்கின்றனர். பரத் சங்கர் இசை அமைக்க, ஷெல்லி ஆர்.கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்கிறார். மகேந்திரன் அரங்கம் அமைக்க, பார்த்தா எடிட்டிங் செய்கிறார். மோகன் ராஜன், பாக்கியம் சங்கர் பாடல்கள் எழுதுகின்றனர். சென்னை பெரம்பூர் கதைக்களத்தில், முழுநீள ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிவருகிறது.

