×

1806ம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடந்தது எப்படி? அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி தொடக்கம்

வேலூர் :  வேலூர் கோட்டையில் கடந்த 1806ம் ஆண்டு, ஜூலை 10ம் தேதி இந்திய வீரர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்தனர். இதுவே இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சியாகும். இந்நிலையில் வரும் ஜூலை 10ம் தேதி வேலூர் சிப்பாய் புரட்சி 215வது ஆண்டு நினைவு தினமாகும். இதனையொட்டி வேலூர் அரசு அருங்காட்சியத்தில், சிப்பாய் புரட்சி நினைவு தின ஓவியக்கண்காட்சி நேற்று தொடங்கியது.நிகழ்ச்சிக்கு வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சுரேஷ், ஓவியர் செல்வகணேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வேலூர் காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பங்கேற்று ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்தார்.கண்காட்சியில், சிப்பாய் புரட்சிக்கான காரணம் என்ன? சிப்பாய் புரட்சி நடந்தது எப்படி? கொல்லப்பட்ட வீரர்கள், ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட சிப்பாய்புரட்சியினை அடிப்படையாக வைத்து வரையப்பட்டிருந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியக்கண்காட்சி வரும் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது….

The post 1806ம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடந்தது எப்படி? அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : soldier ,revolution of 1806 ,Vellore ,Englishmen ,Vellore Fort ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...