×

தீர்ப்புகள் விற்கப்படும் வன்முறையை தூண்டும் படம் அல்ல: சத்யராஜ் பேச்சு

சத்யராஜ் நடித்துள்ள புதிய படம் தீர்ப்புகள் விற்கப்படும். தீரன் இயக்கி உள்ளார். ஸ்ருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். வருகிற 31ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த படம் வன்முறையை தூண்டும் படம் அல்ல என்கிறார் சத்யராஜ்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தீர்ப்புகள் விற்கப்படும் கதையை தீரன் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் அதே சமயம் படம் பற்றி மிகவும் கவலையாகவும் உணர்ந்தேன். எனது கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது, கதை கேட்டவுடனே உடனடியாக படப்பிடிப்பிற்கு செல்ல தோன்றியது.

ஆனால் இன்னொரு வகையில், தற்போதைய சமூகப் பிரச்சினையைக் நேரடியாக கையாளும் அழுத்தமான கருப்பொருளைக் இந்தப்படம் கொண்டிருப்பதும், மேலும் படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கு தவிர்க்க முடியாத சுமையை உருவாக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது.

நேர்மையுடன் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக சட்டம் சரியாக செயல்பட்டால், ஒரு சாமானியன் சட்டத்தைக் கையில் எடுப்பது எப்போதும் அவசியமில்லை என்பதை, வலுவாக நியாயப்படுத்தும் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்பைக் கையாள்கிறது இந்தப் படம். ஆனால் அதே  நேரத்தில், இந்த படம் வன்முறையைத் தூண்டாது. திரையரங்கில் படத்தை பார்த்த பிறகு, இந்த படத்தின் தலைப்பிற்கான மதிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக உணருவார்கள் என்று நினைக்கிறேன். என்கிறார் சத்யராஜ்.

Tags : Satyaraj ,
× RELATED பணம் கேட்டு மிரட்டியவர் கைது