×

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ஏடிஎம் கார்டு மூலம் ரூ.12 ஆயிரம் கொள்ளை

பெரம்பூர்:  சென்னை வியாசர்பாடி பிவி காலனி 20வது தெருவை சேர்ந்தவர் அங்கம்மாள் (45). இவரது மகன் கார்த்திகேயன். இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தனது மகன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு, அங்கம்மாள் வியாசர்பாடி எம்கேபி நகர் 1வது குறுக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, பணம் வராததால் பின்னால் நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபரிடம் உதவி கேட்டுள்ளார். உதவி செய்வதுபோல ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுப்பதுபோல நடித்து அதன்பின்பு பணம் வரவில்லை என்று கூறி அவரிடம் இருந்த வேறு ஏடிஎம் கார்டை அங்கம்மாளுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரத்தில் கார்த்திகேயன் செல்போன் எண்ணிற்கு ₹12 ஆயிரத்தை எடுத்ததுபோல குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், அங்கம்மாள் பணம் எடுக்கவில்லை இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த அங்கம்மாள் எம்கேபி நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். …

The post பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ஏடிஎம் கார்டு மூலம் ரூ.12 ஆயிரம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Angammal ,20th Street, Vyasarpadi PV Colony, Chennai ,Karthikeyan ,Ampathur ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது