×

ஓடிடி தொடரில் விதார்த், பசுபதி

விதார்த், பசுபதி, லட்சுமி பிரியா சந்திரமவுலி, லிசி ஆண்டனி நடித்துள்ள ‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’ என்ற தொடருக்கான டிரைலரை சோனி லிவ் வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 5ம் தேதி ஒளிபரப்பாகும் இத்தொடரின் ஒவ்வொரு முடிவிலும் மர்மங்கள் நீண்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.

குற்ற உணர்வுக்கும், அப்பாவித்தனத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் உளவியல் பயண அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும். நம்பிக்கைக்கும், சட்டத்துக்கும் நடுவே சிக்கியுள்ள பசுபதி, எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருப்பார்? நல்ல நோக்கத்தில் செய்த செயல்கள் எதிர்பாராத ஆபத்தான விளைவுகளை உண்டாக்க, மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளியாகின்றன. செல்வமணி இயக்கத்தில் ஹாப்பி யுனிகான், ஆக்புல்ஸ் தயாரித்துள்ள இத்தொடரில், அம்மாவாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, போலீசாக விதார்த் நடித்துள்ளனர்.

Tags : Vidharth ,Pasupathi ,Sony Liv ,Lakshmi Priya Chandramouli ,Lizzy Antony ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்