×

சாயிஷா திடீர் அட்வைஸ்

ஆர்யாவை காதல் திருமணம் செய்த சாயிஷா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு மகளுக்கு தாயானார். இந்நிலையில், தன் உடலழகை மீட்டெடுக்கும் விதமாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தால் வருத்தப்படக் கூடாது. நம்மால் முடியாத கடினமான விஷயங்களில் இருந்து விலகியிருப்பது மிகவும் நல்லது. தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகளை வலுக்கட்டாயமாக மேற்கொண்டால், அதன் பின்விளைவுகள் வேறுமாதிரி இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் அவரவர் பார்வையில் அழகு.

யார் என்ன கமெண்ட் செய்தாலும், நம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளும் விஷயத்தில் மற்றவரைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. அவரவர் உடல்வாகு வேறு. நம்மால் என்ன முடியும் என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்’ என்றார்.

Tags : Saiyasha ,
× RELATED இந்த கிரகத்தின் சிறந்த கணவர்: ஆர்யாவை புகழ்ந்த சாயிஷா