பிரியாவுக்கு இயக்குனர் சிபாரிசு

பிரியா பவானி சங்கர் நடிப்பில் நாளை ஓடிடியில் ரிலீசாகும் படம், ‘பிளட் மணி’. திரைக்கு வந்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ஐரா’ ஆகிய படங்களின் இயக்குனர் கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ளார். படம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில், ‘இப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ‘மான்ஸ்டர்’ படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் செய்த சிபாரிசுதான். ராமேஸ்வரம் வெயிலில்  படப்பிடிப்பு நடந்தது. சுட்டெரிக்கும் வெயிலைப் பொறுத்துக்கொண்டு பணியாற்றினோம். மிகச்சிறந்த கதை இது. சங்கர் தாஸ், நெல்சன் வெங்கடேசன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சிரிஷ், கிஷோர், லேகா உள்பட பலர் யதார்த்தமாக நடித்துள்ளனர்’ என்றார்.

Related Stories: