×

சண்டை போட்ட இனியா

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ‘ரைட்டர்’. வரும் 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் நடித்தது குறித்து இனியா கூறும்போது, ‘இப்படத்தின் கதையை டைரக்டர் பிராங்க்ளின் என்னிடம் சொன்னபோது, மற்றவர்களின் கேரக்டர்களைப் பற்றி குறிப்பிட்டாரே தவிர, இதில் என் கேரக்டர் என்ன என்பதைப் பற்றி மட்டும் கடைசிவரை சொல்லவில்லை. நானும் அதிக ஆர்வத்துடன், படத்தில் நான் என்னவாக நடிக்கிறேன் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், படத்தில் எனது கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்தது என்பதால், தற்போது அதை வெளியில் சொல்ல முடியாது என்றார்.

இதுவரை பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கும் நான், ‘ரைட்டர்’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பதாக நினைத்திருந்தேன். ஆனால், அவர்தான் இக்கதையின் நாயகன் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற பிறகு தெரிந்துகொண்டேன். தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளேன். பா.ரஞ்சித் ைடரக்‌ஷனில் நடிக்க விரும்புகிறேன். அதற்கான கதை எப்போது அமையும் என்று தெரியவில்லை’ என்றார்.

Tags : Iniya ,
× RELATED 10 வயதில் ஆங்கில புத்தகம் எழுதி அசத்திய சிறுமி: கின்னசுக்கு விண்ணப்பம்