×

40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை கௌரவித்து சிறப்பு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை, சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், இன்று (14.12.2022) அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, ஐயப்பன் திருவுருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையை நினைவுப் பரிசாக  வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இப்பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. கணபதி வழிபாட்டுடன் தொடங்கி சபரிமலை மேல்சாந்தி ஸ்ரீ காந்த் திருமேனி 108 சரணகோசத்துடன் ஐயப்பனுக்கு மலர் வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, கலைமாமணி வீரமணியின் இசை வாரிசு வீரமணிகண்ணன் கோடீஸ்வரன் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல்களும், சொல்வேந்தர் சுகிசிவம்-தின் சாமியே சரணம்  என்ற ஆன்மிக சொற்பொழிவும், கொளத்தூர் சிவசக்தி நாட்டியாலய வைஷ்ணவி சுகுமார் மற்றும் மிருதுளா அனிஷ்குமார் குழுவினரின் ஐயப்ப சரித்திரம் என்ற  நாட்டிய நாடகமும், கலைமாமணி தேச மங்கையர்க்கரசி-யின் அருள்தரும் ஐயப்பன் என்ற ஆன்மிக சொற்பொழிவும், ஐயப்ப பக்தர்கள் பஜனை குழுவினரின் பஜனையும் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஐயப்பன் திருவுருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையை நினைவுப் பரிசாக  வழங்கினார். நிறைவாக அருள்மிகு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களும், இறையன்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் சென்னை, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப.,  கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்பிரியா, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், சென்னை மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை கௌரவித்து சிறப்பு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Minister ,B. K.K. Segarbabu ,Chennai ,Hindu Religious Foundation ,Chennai Zone ,Thirukoils ,Arulmigu Kapaleeswarar Kallagambal Wedding Hallam ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்