×

கடற்படையில் 1500 இடங்கள்

பிளஸ் 2/10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இந்திய கடற்படையில் காலியாக உள்ள 1500 இடங்களுக்கு பிளஸ் 2, 10ம் வகுப்பு படித்த, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள்விண்ணப்பிக்கலாம்.i) Agniveer Recruitment (SSR-01/2023 Batch). மொத்த இடங்கள்: 1400. தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி.ii) Agniveer Recruitment (MR-01/2023 Batch): மொத்த இடங்கள்: 100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.இரு பணிகளுக்கும் வயது: 1.5.2002க்கும் 31.10.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம், 2ம் வருடம் ₹ 33,000, 3ம் வருடம் 36,500, 4ம் வருடம் 40,000 உயரம்: ஆண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீ., இருக்க வேண்டும்.உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ தூரத்தை ஆறரை நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், 12 புஷ் அப்ஸ் எடுக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 15 ஸ்குவாட்ஸ், 12 புஷ்அப்ஸ் எடுக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.500/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.joinindianarmy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2022.

The post கடற்படையில் 1500 இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Navy ,Indian Navy ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...