×

அடுக்குமாடியில் குடியிருக்கும் 13 ஆயிரம் பேருக்கு தனி பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விண்ணப்பம் பெற்றார்

ஆலந்தூர்: ஆலந்தூரில் அடுக்குமாடியில் குடியிருக்கும் 13 ஆயிரம் பேருக்கு தனி பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பட்டா பெறுவதற்கான விண்ணப்பங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 160, 161, 162, 163 ஆகிய வார்டுகளில் வசிக்கும் அடுக்கு மாடியில் குடியிருப்போருக்கு தனிப்பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 2ம் நாளாக நேற்று நடந்தது. முகாமுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், கோட்டாட்சியர் சாய் வர்த்தினி, வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட அடுக்குமாடியில் குடியிருப்போர் தாங்கள் பட்டா பெறுவதற்கான விண்ணப்பங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர். அப்போது, அவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் ஆவணங்கள் வருவாய்த்துறை ஆய்வுக்கு பின் 10 நாட்களில் பட்டா வழங்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களின் இடம் கூட்டு பட்டாவாக இருப்பதால் அதனை விற்க சிரமப்படுகிறார்கள். இதை தவிர்க்க தனிப்பட்டா வழங்குவதற்காக இந்த முகாம் நடைபெறுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில், ஆலந்தூர் தனி தாசில்தார் கண்ணன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், காங்கிரசை சேர்ந்த சுதா நாஞ்சில் பிரசாத், திமுக நிர்வாகிகள் வேலவன், ஜெ.நடராஜன், சீனிவாசன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், கே.பி.முரளிகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் உபைதூர் பெருமாள் விஜய்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post அடுக்குமாடியில் குடியிருக்கும் 13 ஆயிரம் பேருக்கு தனி பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விண்ணப்பம் பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,ALANTUR ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்