×

கொலை குற்றவாளிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் பிரியாணி கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்த 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் பிரியாணி கடை நடத்தி வரும் நாகூர் கனி (34) என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதில், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அயனாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நீலாங்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (எ) செந்தில் (23), கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆசை (எ) பிரதீப் (24), சூளைமேடு பகுதியை சேர்ந்த தமிம் ஜிலான் (25), வடபழனி பகுதியை சேர்ந்த அகஸ்டின் (எ) கண்டு (27), ஓட்டேரி பகுதியை சேர்ந்த சரண்குமார் (23) ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த காரணத்தினாலும், கொலை குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினாலும் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்று, போலீஸ் கமிஷனர், இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து, தற்போது சிறையில் உள்ள 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது….

The post கொலை குற்றவாளிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Biryani ,Ayanavaram ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...