×

உதவி வன பாதுகாவலர் பதவி இணையதளம் வாயிலாக ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 1ஏ பணியில் உதவி வன பாதுகாவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு வனப்பணி(குரூப் 1ஏ) பதவியில் காலியாக உள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இப்பதவிகளுக்கு உடனடியாக இணையதளம் www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய ஜனவரி 17ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 19ம் தேதி இரவு 11.59 மணி வரை காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் நிலை தேர்வு நடைபெறும். முதல் நிலை தேர்வில் பொது அறிவு(பட்டப்படிப்பு ்) 175 கேள்விகளும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்(10ம் வகுப்பு தரம்) 25 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இவற்றிற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும். இத்தேர்வுக்கான அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது….

The post உதவி வன பாதுகாவலர் பதவி இணையதளம் வாயிலாக ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Conservator ,Dinakaran ,
× RELATED குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ்...