×

மருதநாயகத்தை சாத்தியமாக்கும் கமல்ஹாசன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெற்றிபெற்ற படம், ‘அமரன்’. இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. கோவாவில் நேற்று தொடங்கிய 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து சென்னையில் நேற்று கமல்ஹாசன் கூறுகையில், ‘நான் தயாரித்த ‘அமரன்’ படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது குறித்து ஒன்றிய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அதற்கு என் நன்றி. படம் திரையிட தேர்வாகி இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. நாட்டுக்காக இப்படத்தை உருவாக்கினோம். சினிமா, நாடு என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இப்படம் நல்ல உதாரணம். தொடர்ந்து நாட்டுக்காக படம் தயாரிப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. இன்றைக்கு தொழில்நுட்பம் அபாரமாக முன்னேறியிருக்கும் காலத்தில், ‘மருதநாயகம்’ படம் சாத்தியமாகும் என்பது என் நம்பிக்கை’ என்றார்.

Tags : Kamal Haasan ,Rajkumar Periyasamy ,Sivakarthikeyan ,Sai Pallavi ,Rajkamal Films International ,G.V. Prakash Kumar ,56th International Film Festival of India ,Goa ,Chennai ,Union government ,International Film Festival of India ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்