×

15 மொழிகளில் 55 நாடுகளில் வெளியாகிறது விக்ராந்த் ரோணா

கன்னட நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் விக்ராந்த் ரோணா. நிரூப் பண்டாரி, மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் 24ம் தேதி 14 மொழிகளில் 55 நாடுகளில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. அதோடு 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. இது ஒரு அட்வன்ஜர் பேண்டசி படம். கன்னட சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

Tags :
× RELATED சபரி விமர்சனம்